فَضْلُ الصَّلَاةِ فِي الْمَسْجِدِ الْحَرَامِ عَلَى غَيْرِهِ مِائَةُ أَلْفِ صَلَاةٍ، وَفِي مَسْجِدِي أَلْفُ صَلَاةٍ، وَفِي مَسْجِدِ بَيْتِ الْمَقْدِسِ خَمْسُمِائَةِ صَلَاةٍ “.
لَفْظُ حَدِيثِهِمَا سَوَاءٌ غَيْرَ أَنَّ الصَّغَانِيَّ، قَالَ: بِخَمْسِمِائَةِ صَلَاةٍ
3845. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(மற்ற பள்ளிகளிலும் தொழும் நன்மையை விட) மஸ்ஜிதுல் ஹராமில் தொழுவது ஒரு இலட்சம் மடங்கு சிறந்தது. எனது பள்ளியில் (மஸ்ஜிதுன் நபவியில்) தொழுவது 1000 மடங்கு சிறந்தது. பைதுல் மக்திஸில் தொழுவது 500 மடங்கு சிறந்தது.
அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)