🔗

shuabul-iman-8383: 8383

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

خَدَمْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَمَا قَالَ لِشَيْءٍ فَعَلْتُهُ: لِمَ فَعَلْتَهُ؟ وَلَا قَالَ لِشَيْءٍ كَسَرْتُهُ: لِمَ كَسَرْتَهُ؟ وَكُنْتُ وَاقِفًا عَلَى رَأْسِ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَصُبُّ عَلَى يَدَيْهِ الْمَاءَ، فَرَفَعَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَأْسَهُ، فَقَالَ: ” أَلَا أُعَلِّمُكَ ثَلَاثَ خِصَالٍ تَنْتَفِعُ بِهَا “؟ قَالَ: قُلْتُ: بَلَى، بِأَبِي وَأُمِّي يَا رَسُولَ اللهِ، قَالَ: ” مَنْ لَقِيتَ مِنْ أُمَّتِي فَسَلِّمْ عَلَيْهِ يَطُلْ عُمُرُكَ، وَإِذَا دَخَلْتَ بَيْتَكَ فَسَلِّمْ عَلَيْهِمْ يَكْثُرْ خَيْرُ بَيْتِكَ، وَصَلِّ صَلَاةَ الضُّحَى فَإِنَّهَا صَلَاةُ الْأَبْرَارِ


8383. அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஒன்பது ஆண்டுகள்) பணிவிடை செய்துள்ளேன். நான் செய்த எதைப் பற்றியும் “இன்னின்னதை நீ ஏன் செய்தாய்?” என்றோ, நான் உடைத்ததை பற்றி ஏன் உடைத்தாய் என்றோ கூறியதில்லை.

(ஒரு தடவை) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர்களின் கைகளில் (உளூ செய்ய) தண்ணீரை ஊற்றும் போது அவர்கள், தன் தலையை உயர்த்தி உனக்கு பயன் தரும் மூன்று நற்குணங்களை கற்றுத் தரவா? என கேட்டார்கள். நான் ஆம்  அல்லாஹ்வின் தூதரே, என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணம் என்று கூறினேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீ மக்களை சந்திக்கும்போது ஸலாம் கூறிக் கொள். அதனால் உனது ஆயுள் அதிகமாகும்.

நீ உன்னுடைய வீட்டில் நுழையும் போது உன்னுடைய குடும்பத்தாருக்கு ஸலாம் சொல்லிக்கொள். அதனால் உனது வீட்டில் நன்மைகள் அதிகமாகும்.

நீ லுஹா தொழுகை தொழுதுக் கொள். அது முன் சென்ற நல்லோர்களின் தொழுகையாகும்.