«تَزَوَّجُوا وَلا تُطَلِّقُوا فَإِنَّ الطَّلاقَ يَهْتَزُّ لَهُ الْعَرْشُ»
6654. அறிவிப்பாளர்: அம்ர் பின் ஜுமைஃ அபூஉஸ்மான்.
இவர் எகிப்து நாட்டின் ஹல்வான் என்ற நகரத்தின் நீதிபதி ஆவார். யஹ்யா பின் ஸயீத் அல்அன்ஸாரீ, ஸுலைமான் அல்அஃமஷ், லைஸ் பின் அபூஸுலைம், ஜுவைபிர் பின் ஸயீத் ஆகியோரிடமிருந்து இவர் ஹதீஸ்களை அறிவித்துள்ளார்.
அபூஇப்ராஹீம் அத்தர்ஜுமானி, ஸுரைஜ் பின் யூனுஸ், அபூஅம்ர் அத்தூரீ, மற்றும் சிலரும் இவரிடமிருந்து ஹதீஸ்களை அறிவித்துள்ளனர்.
இவர் பிரபலமானவர்களின் வழியாக முன்கரான செய்திகளை அறிவிப்பவர். பலமானவர்களின் வழியாக இட்டுக்கட்டப்பட்ட-பொய்யான செய்திகளை அறிவிப்பவர் ஆவார்.
இவர் அறிவித்துள்ள செய்திகள்:
4103. திருமணம் செய்யுங்கள். ஆனால் விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)