🔗

தாரீகு பக்தாத்: 4578

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

كُنْتُ وَاقِفًا بَيْنَ يَدَيْ رَسُولِ اللَّهِ، صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ: مَنْ صَلَّى عَلَيَّ يَوْمَ الْجُمُعَةِ ثَمَانِينَ مَرَّةً غَفَرَ اللَّهُ لَهُ ذُنُوبَ ثَمَانِينَ عَامًا، فَقِيلَ لَهُ: كَيْفَ الصَّلاةُ عَلَيْكَ يَا رَسُولَ اللَّهِ؟ قَالَ: تَقُولُ: اللَّهُمَّ صَلِّ عَلَى مُحَمَّدٍ عَبْدِكَ وَنَبِيِّكَ وَرَسُولِكَ النَّبِيِّ الأُمِّيِّ، وَتَعْقِدُ وَاحِدَةً


7278. வஹ்ப் பின் தாவூத் பின் ஸுலைமான்-அபுல்காஸிம்-அல்மக்ரமீ.

இவர் இஸ்மாயீல் பின் உலய்யா அவர்களிடமிருந்து அறிவித்துள்ளார்.
இவரிடமிருந்து முஹம்மது பின் ஜஃபர் அல்மதீரீ என்பவர் அறிவித்துள்ளார். இவர் பார்வையற்றவர். பலமானவர் அல்ல.

4578. நான் நபி (ஸல்) அவர்களின் அருகில் நின்றிருந்தபோது, “வெள்ளிக்கிழமை யார் என்மீது 80 தடவை ஸலவாத் சொல்வாரோ அவரின் 80 வருட பாவங்கள் மன்னிக்கப் படுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அவர்களிடம், “உங்கள் மீது எவ்வாறு ஸலவாத் கூற வேண்டும்? என்று கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் அப்திக, வ நபிய்யிக,  வரஸூலிகன் நபிய்யில் உம்மிய்யி என்று நீ கூறி ஒரு தடவை (கையால்) எண்ணிக் கொள்ளவேண்டும்” என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)