🔗

திர்மிதி: 1

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا تُقْبَلُ صَلَاةٌ بِغَيْرِ طُهُورٍ وَلَا صَدَقَةٌ مِنْ غُلُولٍ»،

قَالَ هَنَّادٌ فِي حَدِيثِهِ: «إِلَّا بِطُهُورٍ»


بسم الله الرحمن الرحيم

அளவிலா அருளாளன், நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்…

அத்தியாயம்: 1

தூய்மைப் பற்றிய நபிமொழிகள்.

பாடம்: 1

(உளூ எனும்) அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது என்பது குறித்து வந்துள்ளவை.

  1. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அங்கத் தூய்மையின்றி எந்தத் தொழுகையும், மோசடிப் பொருட்களில் இருந்து (செய்யப்படும்) எந்தத் தர்மமும் (அல்லாஹ்வால்) ஏற்கப்படாது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

இந்தச் செய்தி இரு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.

இவற்றில் அறிவிப்பாளர் ஹன்னாத் பின் ஸரிய்யீ (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் “தூய்மை மூலமே தவிர எந்தத் தொழுகையும் ஏற்கப்படாது” என்று உள்ளது.

அபூஈஸா (என்ற) திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தக் கருத்தில் வந்துள்ள ஹதீஸ்களில் இது மிகச் சரியானதும், அழகானதுமாகும்.

மேலும் ஆமிர் என்றும் ஸைத் என்றும் கூறப்படும் அபுல்மலீஹ் பின் உஸாமா (ரஹ்) அவர்களிடமிருந்து அவரின் தந்தை (உஸாமா பின் உமைர்-ரலி) வழியாகவும், அபூஹுரைரா (ரலி), அனஸ் (ரலி) ஆகிய நபித்தோழர்கள் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.