🔗

திர்மிதி: 10

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«أَنَّهُ رَأَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَبُولُ مُسْتَقْبِلَ الْقِبْلَةِ»،

أَخْبَرَنَا بِذَلِكَ قُتَيْبَةُ قَالَ: أَخْبَرَنَا ابْنُ لَهِيعَةَ،


10 . அபூகதாதா அல்அன்ஸாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கிப்லாவை முன்னோக்கிச் சிறுநீர் கழிப்பதை நான் கண்டேன்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அபூகதாதா (ரலி) அவர்கள் வழியாக இப்னு லஹீஆ என்பவர் அறிவிக்கும் இந்த ஹதீஸை விட நபி (ஸல்) அவர்களைக் குறித்து ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவித்துள்ள முந்தைய ஹதீஸ் எண்-9 இல் இடம்பெற்றுள்ள செய்தியே மிகவும் ஆதாரபூர்வமானதாகும்.

(ஏனெனில், இந்த ஹதீஸின் அறிவிப்பாளர்தொடரில் நான்காவது அறிவிப்பாளராக இடம்பெற்றுள்ள) இப்னு லஹீஆ என்பவர், ஹதீஸ்துறை அறிஞர்களிடம் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார். அவரது நினைவாற்றல் குறித்து யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் உள்ளிட்டோர் விமர்சித்து அவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.