🔗

திர்மிதி: 100

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«تَوَضَّأَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَمَسَحَ عَلَى الخُفَّيْنِ وَالعِمَامَةِ»،

قَالَ بَكْرٌ: وَقَدْ سَمِعْتُهُ مِنَ ابْنِ المُغِيرَةِ، وَذَكَرَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ فِي هَذَا الحَدِيثِ فِي مَوْضِعٍ آخَرَ «أَنَّهُ مَسَحَ عَلَى نَاصِيَتِهِ وَعِمَامَتِهِ»


பாடம்:

தலைப்பாகை மீது ஈரக்கையால் தடவுதல் (மஸ்ஹ் செய்வது)

100. முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (உளூ எனும்) அங்கத் தூய்மை செய்து, காலுறைகள் மீதும், தலைப்பாகையின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதில் இடம்பெறும் அறிவிப்பாளர் பக்ர் பின் அப்துல்லாஹ் அல்முஸனீ (ரஹ்) அவர்கள், “நான் இந்தச் செய்தியை முஃகீரா அவர்களின் மகன் (அப்துல்லாஹ் பின் முஃகீரா) அவர்களிடமிருந்தும் (நேரடியாக) கேட்டிருக்கிறேன்” என்று கூறினார்கள்.

(எனது ஆசிரியரான) முஹம்மது பின் பஷ்ஷார் அவர்கள் இந்த ஹதீஸை வேறொரு தடவை அறிவிக்கும் போது, “நபி (ஸல்) அவர்கள், தனது முன் நெற்றியின் மீதும் தலைப்பாகையின் மீதும் மஸ்ஹ் செய்தார்கள்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இந்த ஹதீஸ் பல்வேறு வகையான அறிவிப்பாளர்தொடர்களில் முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. இவற்றில் சிலர், “நபி (ஸல்) அவர்கள் நெற்றிப் பகுதியிலும், தலைப்பாகையின் மீதும் தடவினார்கள் (மஸ்ஹ் செய்தார்கள்)” என்று குறிப்பிட்டுள்ளனர். மற்றவர்கள் நெற்றிப் பகுதியைக் குறிப்பிடவில்லை.

நான், அஹ்மத் பின் ஹஸன் (ரஹ்) அவர்களிடம் (கீழ்க்கண்டவாறு)  செவியேற்றுள்ளேன்.

அஹ்மத் பின் ஹன்பல் (ரஹ்) அவர்கள், “யஹ்யா பின் ஸயீத் அல்கத்தான் (ரஹ்) அவர்களைப் போன்று நான் எவரையும் கண்ணால் கண்டதில்லை” என்று கூறியதை நான் செவியேற்றுள்ளேன்.

இப்பாடப்பொருள் தொடர்பான செய்திகள் அம்ர் பின் உமைய்யா (ரலி), ஸல்மான் (ரலி), ஸவ்பான் (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகியோரிடமிருந்தும் வந்துள்ளன.

முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்களின் வழியாக வரும் இந்த ஹதீஸ் “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தைச் சேர்ந்தது.

இந்தச் செய்தியில் உள்ள சட்டம் நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் பலரின் கருத்தாகும். அவர்களில் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி), அனஸ் (ரலி) போன்றோர் அடங்குவர். “தலைப்பாகையின் மீது மஸ்ஹ் செய்யலாம் என்ற இந்தக் கருத்தை அல்அவ்ஸாஈ (ரஹ்), அஹ்மத் (ரஹ்), இஸ்ஹாக் (ரஹ்) போன்றோரும் கூறுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் மற்றும் தாபிஈன்களில் வேறுசிலர், “தலைப்பாகையின் மீது மட்டும் மஸ்ஹ் செய்யக்கூடாது. தலையுடன் சேர்த்து மஸ்ஹ் செய்ய வேண்டும் என்று கூறுகிறார்கள். இதுவே ஸுஃப்யான் ஸவ்ரீ (ரஹ்), மாலிக் பின் அனஸ் (ரஹ்), இப்னுல் முபாரக் (ரஹ்), ஷாஃபிஈ (ரஹ்) போன்றோரின் கருத்தாகும்.

நான் ஜாரூத் பின் முஆத் (ரஹ்) அவர்களிடமிருந்து வகீஉ பின் ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாக செவியேற்றேன்.

வகீஃ பின் ஜர்ராஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: தலைப்பாகையின் மீது மஸ்ஹ் செய்வது கூடும் என்பதற்கு அது குறித்து வந்துள்ள ஹதீஸ்களே போதுமானதாகும். (தலைப்பாகையும் தலையின் ஒரு பகுதியாகும்)