«المَيِّتُ يُعَذَّبُ بِبُكَاءِ أَهْلِهِ عَلَيْهِ»، فَقَالَتْ عَائِشَةُ: يَرْحَمُهُ اللَّهُ، لَمْ يَكْذِبْ وَلَكِنَّهُ وَهِمَ، إِنَّمَا قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لِرَجُلٍ مَاتَ يَهُودِيًّا: «إِنَّ المَيِّتَ لَيُعَذَّبُ، وَإِنَّ أَهْلَهُ لَيَبْكُونَ عَلَيْهِ»
பாடம்:
இறந்தவருக்காக அழுவது கூடும் என்பது குறித்து வந்துள்ளவை.
1004. குடும்பத்தினர் (சப்தமாக) அழுவதன் காரணமாக மய்யித்திற்கு வேதனை கொடுக்கப்படுகிறது என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்.
(இதை ஆயிஷா (ரலி) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டபோது) ஆயிஷா (ரலி) அவர்கள், “அல்லாஹ் அபூஅப்துர்ரஹ்மான் (இப்னு உமர்-ரலி) அவர்களுக்கு அருள்புரிவானாக! அவர் பொய்யுரைக்கவில்லை; என்றாலும் அவர் தவறாக விளங்கிக்கொண்டார்;
யூதராக மரணித்த ஒருவர் விசயத்தில் தான், இறந்தவர் (தன் வாழ்நாளில் புரிந்த சிறிய, பெரிய பாவங்களின் காரணத்தால்) வேதனை செய்யப்படுகிறார். அவரின் குடும்பத்தினரோ, இப்போது அவருக்காக அழுது கொண்டிருக்கின்றனர்’ என்று கூறினார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: யஹ்யா பின் அப்துர்ரஹ்மான் (ரஹ்)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் இப்னு அப்பாஸ் (ரலி), கரழா பின் கஅப் (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு மஸ்ஊத் (ரலி), உஸாமா பின் ஸைத் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
ஆயிஷா (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ், “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தைச் சேர்ந்ததாகும். இது பல்வேறு வழிகளில் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. அறிஞர்கள் இந்த ஹதீஸுக்கு, “ஒருவர் மற்றொருவரின் (பாவ) சுமையைச் சுமக்க மாட்டார்” எனும் (அல்குர்ஆன்: 6:164) ஆவது இறைவசனத்திற்கு ஏற்ப விளக்கமளிக்கின்றனர். மேலும் இதுவே இமாம் ஷாஃபிஈ (ரஹ்) அவர்களின் கருத்தும் ஆகும்.