خَرَجْنَا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي جَنَازَةٍ فَرَأَى نَاسًا رُكْبَانًا، فَقَالَ: «أَلَا تَسْتَحْيُونَ إِنَّ مَلَائِكَةَ اللَّهِ عَلَى أَقْدَامِهِمْ وَأَنْتُمْ عَلَى ظُهُورِ الدَّوَابِّ»
பாடம் :
வாகனத்தில் ஜனாஸாவை பின்தொடர்ந்து செல்வது வெறுப்பிற்குரியது.
1012. நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு ஜனாஸாவை பின்தொடர்ந்து சென்று கொண்டிருந்த போது, அவர்கள் சிலர் வாகனத்தில் வருவதைக் கண்டார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் வானவர்கள் நடந்து வரும் போது நீங்கள் வாகனத்தின் மேல் வருகிறீர்களே! இதற்கு வெட்கப்படமாட்டீர்களா? என்று அவர்களைப் பார்த்துக் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் முஃகீரா பின் ஷுஅபா (ரலி), ஜாபிர் பின் ஸமுரா (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளன.
ஸவ்பான் (ரலி) அவர்களின் வழியாக வரும் மேற்கண்ட செய்தி (மவ்கூஃப்) நபித்தோழரின் சொல்லாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இமாம் முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இந்த செய்தி நபித்தோழரின் சொல்லாக வந்திருப்பதே உண்மையாகும்.