🔗

திர்மிதி: 1015

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«أَسْرِعُوا بِالجَنَازَةِ، فَإِنْ يَكُنْ خَيْرًا تُقَدِّمُوهَا إِلَيْهِ، وَإِنْ يَكُنْ شَرًّا تَضَعُوهُ عَنْ رِقَابِكُمْ»


பாடம்:

ஜனாஸாவை (த்தோளில் சுமந்த பின்) விரைந்துக் கொண்டு செல்லுதல்.

1015. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜனாஸாவை (சுமந்து செல்லும் போது) விரைந்து செல்லுங்கள். அது (மய்யித்) நல்லறங்கள் புரிந்ததாயிருந்தால் அந்த நன்மையின் பால் விரைந்து செல்கிறீர்கள்; அவ்வாறில்லாவிட்டால் ஒரு தீங்கை (விரைவில்) உங்களின் தோள்களிலிருந்து இறக்கி வைக்கிறீர்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருள் தொடர்பான செய்திகள் அபூபக்ரா (ரலி) அவர்களின் வழியாகவும் வந்துள்ளன.

அபூஹுரைரா (ரலி) அவர்களின் மேற்கண்ட ஹதீஸ், “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தைச் சேர்ந்ததாகும்.