«أَنَّ رَجُلًا قَتَلَ نَفْسَهُ، فَلَمْ يُصَلِّ عَلَيْهِ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ»
பாடம்:
தற்கொலை செய்தவருக்கு ஜனாஸாத் தொழுகை நடத்தப்படவில்லை என்பது குறித்து வந்துள்ளவை.
1068. ஜாபிர் பின் ஸமுரா (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் தற்கொலை செய்துக் கொண்டார். அவருக்கு நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாத்) தொழுகை நடத்தவில்லை.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன்” தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.
(தற்கொலை செய்தவருக்கு (ஜனாஸாத்) தொழுகை வைக்கலாமா? என்பது குறித்து அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு உள்ளது.
சில அறிஞர்கள் கூறுகிறார்கள்: கிப்லாவை நோக்கி தொழுத அனைவருக்காகவும், தற்கொலை செய்தவருக்காகவும் (ஜனாஸாத்) தொழ வேண்டும். இது ஸுஃப்யான் ஸவ்ரீ, இஸ்ஹாக் பின் ராஹவைஹி ஆகியோரின் கருத்தாகும்.
அஹ்மத் இமாம் கூறுகிறார்: தற்கொலை செய்தவருக்காக இமாம் தொழக்கூடாது. ஆனால் இமாம் அல்லாத மற்ற (பொது) மக்கள் தொழலாம்.