«مَنْ عَزَّى مُصَابًا فَلَهُ مِثْلُ أَجْرِهِ»
பாடம்:
துன்பத்தில் இருப்பவருக்கு ஆறுதல் கூறுவதால் கிடைக்கும் நன்மை குறித்து வந்துள்ளவை.
1073. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
துன்பத்தில் இருப்பவருக்கு ஒருவர் ஆறுதல் கூறினால் அவருக்கு கிடைக்கும் நற்பலன் போன்றது, (ஆறுதல் கூறிய) இவருக்கும் கிடைக்கும்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். அலீ பின் ஆஸிம் என்பவரே இதை நபியின் சொல்லாக அறிவித்துள்ளார் என்று அறிகிறோம். முஹம்மத் பின் ஸூகா அவர்களிடமிருந்து அறிவிக்கும் மற்றவர்கள் இதை நபித்தோழரின் சொல்லாக அறிவித்துள்ளனர். நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.
இந்தச் செய்தியை(ப் போன்று பல செய்திகளை இவ்வாறு) அறிவித்ததின் காரணமாகவே இவர் அறிஞர்களின் விமர்சனத்தால் அதிகம் பிரச்சனைக்குள்ளாக்கப்பட்டார் என்று கூறப்படுகிறது.