«البَغَايَا اللَّاتِي يُنْكِحْنَ أَنْفُسَهُنَّ بِغَيْرِ بَيِّنَةٍ»
பாடம்:
சாட்சியின்றி திருமணம் இல்லை என்பது குறித்து வந்துள்ளவை.
1103. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
விபச்சாரிகள் தான், சாட்சியின்றி (சான்று இன்றி) தங்களைத் தாங்களே திருமணம் செய்து கொடுப்பார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
யூஸுஃப் பின் ஹம்மாத் (ரஹ்) கூறியதாவது:
அப்துல் அஃலா அவர்கள் இந்த ஹதீஸை தஃப்ஸீர் (குர்ஆன் விளக்கம்) பாட தலைப்பில், நபியின் சொல்லாக அறிவித்தார். அதே ஹதீஸை தலாக் (விவாகரத்து) பாட தலைப்பில் நபித்தோழரின் சொல்லாக அறிவித்தார். நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.