أَلَا لَا تُغَالُوا صَدُقَةَ النِّسَاءِ، فَإِنَّهَا لَوْ كَانَتْ مَكْرُمَةً فِي الدُّنْيَا، أَوْ تَقْوَى عِنْدَ اللَّهِ لَكَانَ أَوْلَاكُمْ بِهَا نَبِيُّ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، «مَا عَلِمْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَكَحَ شَيْئًا مِنْ نِسَائِهِ وَلَا أَنْكَحَ شَيْئًا مِنْ بَنَاتِهِ عَلَى أَكْثَرَ مِنْ ثِنْتَيْ عَشْرَةَ أُوقِيَّةً»
1114-2. அபுல்அஜ்ஃபாஉ அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
(கலீஃபா) உமர் (ரலி) அவர்கள் (ஒரு உரையில்) பின்வருமாறு கூறினார்கள்:
அறிந்துகொள்ளுங்கள்! பெண்களுக்கு வழங்கும் திருமணக்கொடை (மஹர்)களில் (அளவு கடந்து கொடுப்பதன் மூலம்) வரம்பு மீறாதீர்கள். இவ்வுலகில் அது மதிப்புமிக்க செயலாகவோ அல்லாஹ்விடம் இறையச்சத்திற்குரிய செயலாகவோ இருக்குமானால் அவ்வாறு வழங்குவதற்கு உங்களையெல்லாம்விட மிகத் தகுதி வாய்ந்தவர்கள், நபி (ஸல்) அவர்கள்தாம்.
(ஆனால்) நபி (ஸல்) அவர்கள் தம் மனைவியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை வழங்கயதாகவோ அல்லது அவர்களுடைய புதல்வியருள் யாருக்கும் பன்னிரண்டு ஊக்கியாக்களைவிடக் கூடுதலாக மணக்கொடை பெற்றதாகவோ நான் அறியவில்லை. (அவ்வாறு கண்டதில்லை)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
அபுல்அஜ்ஃபாஉ அஸ்ஸுலமீ (ரஹ்) அவர்களின் இயற்பெயர் “ஹரிம்” என்பதாகும். கல்வியாளர்களின் வழக்கில் ஒரு ஊக்கியா என்பது 40 திர்ஹங்களாகும். எனவே 12 ஊக்கியா என்பது 480 திர்ஹங்களாகும்.