لَا تُؤْذِي امْرَأَةٌ زَوْجَهَا فِي الدُّنْيَا، إِلَّا قَالَتْ زَوْجَتُهُ مِنَ الحُورِ العِينِ: لَا تُؤْذِيهِ، قَاتَلَكِ اللَّهُ، فَإِنَّمَا هُوَ عِنْدَكَ دَخِيلٌ يُوشِكُ أَنْ يُفَارِقَكِ إِلَيْنَا
பாடம்:
1174. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
இந்த உலகில் ஒரு பெண் தனது கணவனுக்கு திட்டுவதின் மூலம் தொல்லைக் கொடுத்தால், ஹூருல் ஈன் எனும் அவருடைய சொர்க்கத்து மனைவியானவர், “அவ்வாறு அவரைத் திட்டாதே! அல்லாஹ் உன்னைக் கொல்வானாக! அவர் உன்னிடம் உள்ள தற்காலிக விருந்தாளி ஆவார். பிறகு உன்னைவிட்டு பிரிந்து எங்களிடம் வரவிருக்கிறார்” என்று கூறுவார்.
அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த ஹதீஸாகும். இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் மட்டுமே இதை நாம் அறிகிறோம்.
இஸ்மாயீல் பின் அய்யாஷ் அவர்கள் ஷாம் வாசிகளிடமிருந்து அறிவிப்பவை மிகவும் ஏற்கத்தக்கவையாகும். ஹிஜாஸ்வாசிகள், மதீனாவாசிகளிடமிருந்து இவர் அறவிக்கும் செய்திகளில் மறுக்கப்படவேண்டிய செய்திகள் உள்ளன.