🔗

திர்மிதி: 1265

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي الخُطْبَةِ عَامَ حَجَّةِ الوَدَاعِ: «العَارِيَةُ مُؤَدَّاةٌ، وَالزَّعِيمُ غَارِمٌ، وَالدَّيْنُ مَقْضِيٌّ»


பாடம்:

இரவலாக வாங்கிய பொருளை திரும்ப ஒப்படைத்தல்.

1265. “இரவல் வாங்கப்பட்ட பொருள் (திருப்பிச்) செலுத்தப்பட வேண்டியதாகும். (பிறரது) கடனுக்குப் பொறுப்பேற்றவனும் கடனாளியே! கடன் நிறைவேற்றப்பட வேண்டியது ஆகும்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் தன்னுடைய உரையில் கூறியதை நான் செவியேற்றேன்.

அறிவிப்பவர் : அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி)