أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا إِلَى اليَمَنِ، فَقَالَ: «كَيْفَ تَقْضِي؟»، فَقَالَ: أَقْضِي بِمَا فِي كِتَابِ اللَّهِ، قَالَ: «فَإِنْ لَمْ يَكُنْ فِي كِتَابِ اللَّهِ؟»، قَالَ: فَبِسُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، قَالَ: «فَإِنْ لَمْ يَكُنْ فِي سُنَّةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟»، قَالَ: أَجْتَهِدُ رَأْيِي، قَالَ: «الحَمْدُ لِلَّهِ الَّذِي وَفَّقَ رَسُولَ رَسُولِ اللَّهِ»
பாடம்:
நீதிபதி எவ்வாறு தீர்ப்பளிக்க வேண்டும்? என்பது குறித்து வந்துள்ளவை.
1327. நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி) அவர்களை யமன் (எனும்) நாட்டுக்கு அனுப்பும் போது, “(பிரச்சனை ஏற்படும்போது) நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். அதற்கவர்கள், “நான் அல்லாஹ்வின் வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார். (அந்தப் பிரச்சனைப் பற்றி) அல்லாஹ்வின் வேதத்தில் இல்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “அல்லாஹ்வின் தூதரின் வழிமுறையில் உள்ளதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன்” என்று பதிலளித்தார்.
அல்லாஹ்வின் தூதருடைய வழிமுறையிலும் இல்லையென்றால் (எவ்வாறு தீர்ப்பளிப்பாய்?) என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், “என்னுடைய சிந்தனையைக் கொண்டு ஆய்வு செய்வேன்” என்று பதிலளித்தார். (உடனே) நபி (ஸல்) அவர்கள் “அல்லாஹ்வின் தூதரின் தூதருக்கு நல்வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்கள்: முஆத் (ரலி) அவர்களின் தோழர்கள்.