🔗

திர்மிதி: 1425

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«مَنْ نَفَّسَ عَنْ مُؤْمِنٍ كُرْبَةً مِنْ كُرَبِ الدُّنْيَا، نَفَّسَ اللَّهُ عَنْهُ كُرْبَةً مِنْ كُرَبِ الآخِرَةِ، وَمَنْ سَتَرَ عَلَى مُسْلِمٍ، سَتَرَهُ اللَّهُ فِي الدُّنْيَا وَالآخِرَةِ، وَاللَّهُ فِي عَوْنِ العَبْدِ، مَا كَانَ العَبْدُ فِي عَوْنِ أَخِيهِ»


1425. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் ஒரு முஃமினை விட்டு உலக சோதனைகளில் ஏதேனும் ஒரு சோதனையை அகற்றி விடுகின்றாரோ அவருக்கு, கியாமத் நாளின் சோதனைகளிலிருந்து ஏதேனும் ஒரு சோதனையை அவரை விட்டும் அல்லாஹ் அகற்றி விடுகின்றான். யார் ஒரு முஸ்லிமின் குறையை இவ்வுலகில் மறைக்கின்றோரோ, அவரின் குறையை அல்லாஹ் இவ்வுலகிலும், மறுமை நாளிலும் மறைக்கின்றான். ஓர் அடியான் தனது சகோதரனுக்கு உதவி செய்து கொண்டிருக்கும் வரை அல்லாஹ் அவனுக்கு உதவி செய்து கொண்டிருக்கின்றான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)