🔗

திர்மிதி: 1499

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

جَلَبْتُ غَنَمًا جُذْعَانًا إِلَى المَدِينَةِ فَكَسَدَتْ عَلَيَّ، فَلَقِيتُ أَبَا هُرَيْرَةَ فَسَأَلْتُهُ، فَقَالَ: سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «نِعْمَ الْأُضْحِيَّةُ الجَذَعُ مِنَ الضَّأْنِ»، قَالَ: فَانْتَهَبَهُ النَّاسُ


பாடம்:

குர்பானி (தியாக)ப் பிராணிகளில், (ஜதஉ எனும் ஆறு மாதத்திற்கு மேல்-ஒரு வயதுக்குட்பட்ட) செம்மறி ஆட்டுக்குட்டியைப் பற்றி வந்துள்ளவை.

1499. அபூகிபாஷ் என்பவர் கூறியதாவது:

நான், (ஜதஉ எனும் பருவத்திலுள்ள) செம்மறிஆடுகளை (சந்தையில் விற்பதற்காக) மதீனாவுக்கு ஓட்டிக் கொண்டு வந்தேன். அவை விற்பனையாகாமல் என்னிடமே இருந்தன. நான் அபூஹுரைரா (ரலி) அவர்களைச் சந்தித்து இதுபற்றி கேட்டேன். அதற்கவர்கள், “ஜதஉ எனும் பருவத்திலுள்ள செம்மறி ஆடுகளை குர்பானி கொடுப்பது நல்லது” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன் என்று கூறினார்கள்.

(இது மக்களுக்குத் தெரிந்த பிறகு, கொள்ளையடிப்பது போன்று) மக்கள் என்னிடமிருந்து அந்த செம்மறி ஆடுகளை (விரைவாக) வாங்கிச் சென்றனர்.