البَقَرَةُ عَنْ سَبْعَةٍ، قُلْتُ: فَإِنْ وَلَدَتْ؟ قَالَ: اذْبَحْ وَلَدَهَا مَعَهَا، قُلْتُ: فَالعَرْجَاءُ، قَالَ: إِذَا بَلَغَتِ المَنْسِكَ، قُلْتُ: فَمَكْسُورَةُ القَرْنِ، قَالَ: لَا بَأْسَ «أُمِرْنَا، أَوْ أَمَرَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ العَيْنَيْنِ وَالأُذُنَيْنِ»
பாடம்:
கொம்புடைந்த, காது பிளக்கப்பட்ட பிராணியை குர்பானி கொடுப்பது.
1503. ஒரு மாட்டை ஏழுபேர் சேர்ந்து குர்பானி கொடுக்கலாம் என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது நான், அது கன்றை ஈன்றால் என்ன செய்வது? என்றுக் கேட்டேன். அதற்கவர்கள், அதையும் அதனுடன் அறுத்துக்கொள்! என்று கூறினார்கள். அது நொண்டியாக இருந்தால்? (அதைக் குர்பானி கொடுக்கலாமா?) என்று கேட்டேன். அதற்கவர்கள், அதனால் அறுக்கும் இடத்திற்கு செல்லமுடியும் என்றால் அதை குர்பானி கொடுக்கலாம் என்று கூறினார்கள். கொம்புடைந்ததாக இருந்தால்? என்று கேட்டேன். அதற்கவர்கள், அது பரவாயில்லை; அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குர்பானி பிராணியின் கண்களையும், காதுகளையும் உன்னிப்பாக கவனித்து வாங்குமாறு எங்களுக்கு கட்டளையிட்டார்கள் என்று பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஹுஜய்யா பின் அதீ (ரஹ்)