«رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَذَّنَ فِي أُذُنِ الحَسَنِ بْنِ عَلِيٍّ حِينَ وَلَدَتْهُ فَاطِمَةُ بِالصَّلَاةِ»
பாடம்:
குழந்தையின் காதில் (பிறந்தவுடன்) பாங்கு கூறுதல்.
1514. ஃபாத்திமா (ரலி) அவர்கள், ஹசன் (ரலி) அவர்களை பெற்றெடுத்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹசன் பின் அலீ (ரலி) அவர்களின் காதில் (தொழுகைக்கு கூறப்படும் பாங்கு போன்று) பாங்கு கூறியதை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: அபூராஃபிஃ (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த செய்தி ஹஸன், ஸஹீஹ் என்ற தரத்தில் அமைந்த செய்தியாகும்…