🔗

திர்மிதி: 1521

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

شَهِدْتُ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الأَضْحَى بِالمُصَلَّى، فَلَمَّا قَضَى خُطْبَتَهُ نَزَلَ عَنْ مِنْبَرِهِ، فَأُتِيَ بِكَبْشٍ، فَذَبَحَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِيَدِهِ، وَقَالَ: «بِسْمِ اللَّهِ، وَاللَّهُ أَكْبَرُ، هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ مِنْ أُمَّتِي»


1521. ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் திடலில் நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜுப் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அவர்கள் தமது உரையை முடித்தவுடன் மிம்பரிலிருந்து இறங்கினார்கள்.

ஒரு ஆடு கொண்டு வரப்பட்டது. அதனை நபி (ஸல்) அவர்கள் தம்முடைய கையினால் அறுக்கும்போது, “பிஸ்மில்லாஹி, வல்லாஹு அக்பர் (அல்லாஹ்வின் திருநாமத்தால் ஆரம்பம் செய்கிறேன். அல்லாஹ்வே மிகப் பெரியவன்); இது என் சார்பாகவும், என்னுடைய உம்மத்தில் உள்ஹிய்யா கொடுக்காதவர்கள் சார்பாகவும் ஆகும்” எனக் கூறினார்கள்.

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இதன் அறிவிப்பாளர்தொடர் “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

ஒருவர் (பிராணியை) அறுக்கும்போது, “பிஸ்மில்லாஹி, வல்லாஹு அக்பர்” என்று கூறவேண்டும் என்பது நபித்தோழர்கள், இன்னபிற கல்வியாளர்களின் (கருத்தும்) செயலுமாகும். இப்னுல் முபாரக் அவர்களும் இந்தக் கருத்தையே கூறியுள்ளார்.

(இதன் அறிவிப்பாளர்தொடரில் ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும்) அல்முத்தலிப் பின் அப்துல்லாஹ் பின் ஹன்த்தப் அவர்கள் ஜாபிர் (ரலி) அவர்களிடம் (ஹதீஸ்களை) செவியேற்கவில்லை என்று கூறப்படுகிறது.