🔗

திர்மிதி: 1633

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«لَا يَلِجُ النَّارَ رَجُلٌ بَكَى مِنْ خَشْيَةِ اللَّهِ حَتَّى يَعُودَ اللَّبَنُ فِي الضَّرْعِ، وَلَا يَجْتَمِعُ غُبَارٌ فِي سَبِيلِ اللَّهِ وَدُخَانُ جَهَنَّمَ»


பாடம்:

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.

1633. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

கறந்த பால் எப்படி திரும்ப மடுவுக்குள் புகாதோ, அதுபோன்று அல்லாஹ்வின் அச்சத்தால் அழுத எந்த மனிதரும் நரகத்தில் நுழைய மாட்டார்.

அல்லாஹ்வின் பாதையில் (போரில்) படும் புழுதியும், நரகத்தின் புகையும் (ஒரு முஸ்லிமின் உடலில்) ஒன்று சேராது.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் வரும் முஹம்மத் பின் அப்துர்ரஹ்மான் அவர்கள் அபூதல்ஹா (ரலி) அவர்களின் (குடும்பத்தாரின்) அடிமையாவார். மேலும் இவர் மதீனாவைச் சேர்ந்தவர் ஆவார்.