«يَا أَبَا ذَرٍّ، أُمَرَاءُ يَكُونُونَ بَعْدِي يُمِيتُونَ الصَّلَاةَ، فَصَلِّ الصَّلَاةَ لِوَقْتِهَا، فَإِنْ صُلِّيَتْ لِوَقْتِهَا كَانَتْ لَكَ نَافِلَةً، وَإِلَّا كُنْتَ قَدْ أَحْرَزْتَ صَلَاتَكَ»
பாடம்:
தலைவர் தொழுகையைத் தாமதப்படுத்தும்போது (மக்கள் உரியநேரத்தில்) விரைவாக தொழுதுவிடுவது பற்றி வந்துள்ளவை.
176. அபூதர்ரே எனக்கு பிறகு வரும் சில தலைவர்கள், தொழுகையை உரியநேரத்தில் தொழாமல் பாழாக்குவார்கள். அப்போது, தொழுகையை அதற்குரிய நேரத்தில் நீ தொழுவிடு பிறகு அவர்களுடன் சேரந்து நீ தொழுதால் அது உமக்கு உபரியான தொழுகையாக அமையும். மேலும் உமது தொழுகையை பாதுகாத்தவராக இருப்பாய் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.