🔗

திர்மிதி: 1859

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«إِنَّ الشَّيْطَانَ حَسَّاسٌ لَحَّاسٌ فَاحْذَرُوهُ عَلَى أَنْفُسِكُمْ، مَنْ بَاتَ وَفِي يَدِهِ رِيحُ غَمَرٍ فَأَصَابَهُ شَيْءٌ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ»


பாடம்: 48

கையில் கொழுப்பு வாடை வீச இரவில் உறங்குவது வெறுப்புக்குரியது என்பது தொடர்பாக வந்துள்ளவை.

1859. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக ஷைத்தான், மோப்ப சக்தி உள்ளவன்; நாவால் நக்குபவன். எனவே, உங்கள் (உடல்) விஷயத்தில் அவனிடம் எச்சரிக்கையோடு இருந்துகொள்ளுங்கள்.

(உணவு உண்ட) கையில் கொழுப்பு வாடை வீச ஒருவர் இரவில் உறங்கி, அதனால் அவருக்கு (தீங்கு) ஏதேனும் நேர்ந்தால், அவர் தம்மைத் தவிர வேறு யாரையும் நிச்சயமாகப் பழிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி, இந்த அறிவிப்பாளர்தொடரில் வந்திருப்பது ”ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

இந்தக் கருத்தில் (சிலவை), ஸுஹைல் பின் ஸாலிஹ் அவர்களிடமிருந்து அபூஹுரைரா (ரலி) அவர்களின் செய்தியாக வேறுசில அறிவிப்பாளர்தொடர்களிலும் வந்துள்ளது.