مُرْنَ أَزْوَاجَكُنَّ أَنْ يَسْتَطِيبُوا بِالمَاءِ، فَإِنِّي أَسْتَحْيِيهِمْ، «فَإِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يَفْعَلُهُ»
பாடம் : 15
தண்ணீரால் துப்புரவு செய்வது பற்றி வந்துள்ளவை.
19. முஆதா பின்த் அப்துல்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
ஆயிஷா (ரலி) அவர்கள் (எங்களிடம்), “உங்கள் கணவர்களிடம் தண்ணீரால் துப்புரவு செய்யச் சொல்லுங்கள். நான் அவர்களிடம் இதைக் கூற வெட்கப்படுகிறேன். ஏனெனில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் (தண்ணீர் மூலமே துப்புரவு) செய்து வந்தார்கள்” என்று கூறினார்கள்.
இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப் பொருள் தொடர்பான ஹதீஸ், ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ (ரலி), அனஸ் (ரலி), அபூஹுரைரா (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
இது ‘ஹஸன் ஸஹீஹ்’ எனும் தரத்தில் அமைந்த ஹதீஸ் ஆகும்.
இந்த ஹதீஸின் அடிப்படையிலேயே செயல்பட வேண்டுமென அறிஞர்கள் கருதுகின்றனர்; கற்களால் துப்புரவு செய்வது போதுமானதாக இருப்பினும், தண்ணீரால் துப்புரவு செய்வதையே அவர்கள் சிறந்ததாகவும் விருப்பமானதாகவும் கருதுகின்றனர். ஸுஃப்யான் அஸ்ஸவ்ரீ, அப்துல்லாஹ் பின் அல்முபாரக், ஷாஃபிஈ,
அஹ்மத் பின் ஹன்பல், இஸ்ஹாக் பின் ராஹவைஹி ஆகியோர் இவ்வாறே கூறியுள்ளனர்.