«لَا يَجْزِي وَلَدٌ وَالِدًا إِلَّا أَنْ يَجِدَهُ مَمْلُوكًا فَيَشْتَرِيَهُ فَيُعْتِقَهُ»
பாடம்:
பெற்றோருக்கு செய்யவேண்டிய கடமைகள் பற்றி வந்துள்ளவை.
1906. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
தன்னுடைய தந்தை அடிமையாக இருப்பதைக் கண்டு அவரை விலைக்கு வாங்கி விடுதலை செய்கின்ற (காரியத்தைத்) தவிர (வேறு எந்தக் காரியத்தைச்) செய்தாலும் மகன் தன் தந்தைக்கு (அவர் செய்த உபகாரத்திற்கு) ஈடு செய்தவராக ஆகமாட்டார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இந்த செய்தி ஹஸன்-ஸஹீஹ் என்ற தரத்தில் உள்ளதாகும். மேலும் இந்த செய்தி ஸுஹைல் பின் அபூஸாலிஹ் அவர்களின் வழியாகவே வந்துள்ளதாக அறிகிறோம். இந்த செய்தியை இவரிடமிருந்து ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களும், வேறு சிலரும் அறிவித்துள்ளனர்.