🔗

திர்மிதி: 1919

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

جَاءَ شَيْخٌ يُرِيدُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَبْطَأَ القَوْمُ عَنْهُ أَنْ يُوَسِّعُوا لَهُ، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «لَيْسَ مِنَّا مَنْ لَمْ يَرْحَمْ صَغِيرَنَا وَيُوَقِّرْ كَبِيرَنَا»


பாடம்:

சிறுவர்கள் மீது இரக்கம் காட்டுவது பற்றி வந்துள்ளவை.

1919. ஒரு முதியவர் நபி (ஸல்) அவர்களின் சபைக்கு வந்தார். அவருக்கு இடமளிக்க மக்கள் தாமதித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், நம்மில் சிறியவருக்கு இரக்கம் காட்டாதோரும், பெரியவருக்கு மரியாதை செய்யாதோரும் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப் பொருளில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபூஹுரைரா (ரலி), இப்னு அப்பாஸ் (ரலி), அபூஉமாமா (ரலி) ஆகியோர் வழியாகவும் ஹதீஸ்கள் வந்துள்ளன. மேற்கண்ட அனஸ் (ரலி) வழியாக வரும் செய்தி அரிதான செய்தியாகும். (காரணம் இதில் வரும் அறிவிப்பாளரான) ஸர்பிய்யு பின் அப்துல்லாஹ் என்பவர் அனஸ் (ரலி) வழியாகவும், மற்றவர்கள் வழியாகவும் சில முன்கரான செய்திகளை அறிவித்துள்ளார்.