قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، إِنَّكَ تُدَاعِبُنَا، قَالَ: «إِنِّي لَا أَقُولُ إِلَّا حَقًّا»
1990. (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடத்தில் நபித்தோழர்களில்) சிலர் அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (எங்களிடத்தில் நகைச்சுவையாக பேசி) எங்களை சிரிக்கவைக்கிறீர்களே? என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே!” என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)