«الأَنَاةُ مِنَ اللَّهِ وَالعَجَلَةُ مِنَ الشَّيْطَانِ»
2012. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நிதானமாக செயல்படுவது அல்லாஹ்வின் பண்பாகும். அவசரமாக செயல்படுவது ஷைத்தானின் பண்பாகும்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஃத் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும்.
இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம்பெறும் அப்துல்முஹைமின் பின் அப்பாஸ் பின் ஸஹ்ல் என்பவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்ற காரணத்தால் சில அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
இதற்கு முன்புள்ள செய்தியில் இடம்பெறும் அஷஜ் அப்துல்கைஸ் (ரலி) அவர்களின் இயற்பெயர் முன்திர் பின் ஆஇத் (ரலி) என்பதாகும்.