«إِنَّ مِنْ أَحَبِّكُمْ إِلَيَّ وَأَقْرَبِكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ أَحَاسِنَكُمْ أَخْلَاقًا، وَإِنَّ أَبْغَضَكُمْ إِلَيَّ وَأَبْعَدَكُمْ مِنِّي مَجْلِسًا يَوْمَ القِيَامَةِ الثَّرْثَارُونَ وَالمُتَشَدِّقُونَ وَالمُتَفَيْهِقُونَ»، قَالُوا: يَا رَسُولَ اللَّهِ، قَدْ عَلِمْنَا الثَّرْثَارُونَ وَالمُتَشَدِّقُونَ فَمَا المُتَفَيْهِقُونَ؟ قَالَ: «المُتَكَبِّرُونَ»
2018. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
உங்களில் எனக்கு மிகவும் நேசத்திற்குரியவரும், மறுமையில் எனக்கு நெருக்கமானவரும் யாரெனில் உங்களில் குணத்தால் மிக அழகானவரே. உங்களில் எனக்கு மிகவும் வெறுப்பிற்குரியவர், மறுமை நாளில் என்னிடமிருந்து மிகவும் தூரமானவர் யாரெனில் வழவழவென்று (வீண்பேச்சு) பேசுபவர், இலக்கியம் வெளிப்பட சிரமப்பட்டு பேசுபவர் மற்றும் பெருமையடிப்பவர் ஆவார்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)