«العَجْوَةُ مِنَ الجَنَّةِ وَفِيهَا شِفَاءٌ مِنَ السُّمِّ، وَالكَمْأَةُ مِنَ المَنِّ وَمَاؤُهَا شِفَاءٌ لِلْعَيْنِ»
பாடம்:
சமையல் காளான் மற்றும் அஜ்வா பேரீத்தம்பழம் பற்றி வந்துள்ளவை.
2066. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அஜ்வா பேரீத்தம்பழம் சொர்க்கத்தை சேர்ந்ததாகும். அதில் விஷத்திற்கு நிவாரணம் இருக்கிறது.
சமையல் காளான் (மூஸா-அலை-அவர்களுடைய சமுதாயத்தாருக்கு அல்லாஹ் இறக்கி வைத்த) மன்னு என்ற வகையைச் சேர்ந்ததாகும். அதன் சாறு கண்ணுக்கு நிவாரணம் ஆகும்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)