🔗

திர்மிதி: 207

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

«الإِمَامُ ضَامِنٌ، وَالمُؤَذِّنُ مُؤْتَمَنٌ، اللَّهُمَّ أَرْشِدِ الأَئِمَّةَ، وَاغْفِرْ لِلْمُؤَذِّنِينَ»


பாடம்:

இமாம் பொறுப்பாளியாவார்; பாங்கு சொல்பவர் நம்புவதற்குரிய ஒருவராவார்.

207. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இமாம் என்பவர் (பின்பற்றி தொழுபவர்களின் தொழுகைக்கு) பொறுப்பாளியாவார். பாங்கு சொல்பவர் (முஅத்தின் தொழுகை நேரங்களில் சரியாக பாங்கு சொல்வதற்காக) நம்புவதற்குரிய ஒருவராவார். அல்லாஹ்வே! இமாம்களை நேர்வழியில் செலுத்து! பாங்கு சொல்பவர்களுக்கு மன்னிப்பு வழங்கு!

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)