🔗

திர்மிதி: 2072

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

دَخَلْتُ عَلَى عَبْدِ اللَّهِ بْنِ عُكَيْمٍ أَبِي مَعْبَدِ الجُهَنِيِّ، أَعُودُهُ وَبِهِ حُمْرَةٌ، فَقُلْنَا: أَلَا تُعَلِّقُ شَيْئًا؟ قَالَ: المَوْتُ أَقْرَبُ مِنْ ذَلِكَ، قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَنْ تَعَلَّقَ شَيْئًا وُكِلَ إِلَيْهِ»


2072. ஈஸா பின் அப்துர்ரஹ்மான் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உகைம் (ரலி) அவர்களுக்கு தோலில் ஒரு வகையான நோய் ஏற்பட்ட போது அவர்களை நலம் விசாரிக்கச் சென்றோம். நீங்கள் தாயத் (போன்ற) ஏதாவது  அணிந்துக்கொள்ளலாமே என்று அவர்களிடம் கூறினோம்.

அதற்கு அவர்கள், தாயத் போன்றதை அணிவதற்கு மரணமே பரவாயில்லை எனக் கூறி, யார் தாயத் (போன்ற)தை தொங்க விடுகின்றாரோ அவர் அதன்பால் சாட்டப்படுவார். (அவருக்கு அல்லாஹ் பொருப்பாளனாக ஆக மாட்டான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று குறிப்பிட்டார்கள்.