🔗

திர்மிதி: 2120

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي خُطْبَتِهِ عَامَ حَجَّةِ الوَدَاعِ: «إِنَّ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى قَدْ أَعْطَى لِكُلِّ ذِي حَقٍّ حَقَّهُ، فَلَا وَصِيَّةَ لِوَارِثٍ، الوَلَدُ لِلْفِرَاشِ، وَلِلْعَاهِرِ الحَجَرُ، وَحِسَابُهُمْ عَلَى اللَّهِ، وَمَنْ ادَّعَى إِلَى غَيْرِ أَبِيهِ أَوْ انْتَمَى إِلَى غَيْرِ مَوَالِيهِ فَعَلَيْهِ لَعْنَةُ اللَّهِ التَّابِعَةُ إِلَى يَوْمِ القِيَامَةِ، لَا تُنْفِقُ امْرَأَةٌ مِنْ بَيْتِ زَوْجِهَا إِلَّا بِإِذْنِ زَوْجِهَا»، قِيلَ: يَا رَسُولَ اللَّهِ وَلَا الطَّعَامَ؟ قَالَ: «ذَلِكَ أَفْضَلُ أَمْوَالِنَا» ثُمَّ قَالَ: «العَارِيَةُ مُؤَدَّاةٌ، وَالمِنْحَةُ مَرْدُودَةٌ، وَالدَّيْنُ مَقْضِيٌّ، وَالزَّعِيمُ غَارِمٌ»


2120. அபூஉமாமா அல்பாஹிலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறுதி ஹஜ்ஜுடைய ஆண்டில் தன்னுடைய உரையில் (பின்வரும் செய்திகளை) கூறினார்கள்: அவை

சொத்துரிமை உடைய ஒவ்வொருவருக்கும் அவரது சொத்துரிமையை (பாகப்பிரிவினை சட்டத்தின் மூலம்) அல்லாஹ் வழங்கி விட்டான். எனவே சொத்துரிமை பெறுபவருக்கு இனி மரண சாசனம் இல்லை.

(தாய்) யாருடைய ஆதிக்கத்தில் இருக்கும் போது குழந்தை பிறக்கின்றதோ அவருக்கே அக்குழந்தை உரியது. விபச்சாரம் செய்தவருக்கு இழப்பு தான். அவர்களின் விசாரணை அல்லாஹ்விடம் உள்ளது.

தன் தந்தை அல்லாதவரை தந்தை என்று குறிப்பிடுபவர், தன் எஜமான் அல்லாதவருடன் தன்னை இணைத்துக் கொள்பவர் ஆகியோர் மீது இறுதி நாள் வரை தொடரும் அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டுமாக!…

எந்த ஒரு பெண்ணும் தன்னுடைய கணவனின் அனுமதியின்றி தன்னுடைய கணவனின்  வீட்டிலிருந்து எதையும் செலவு செய்யக்கூடாது என்று அல்லாஹ்வின் அவர்கள் கூறினார்கள். அப்போது “அல்லாஹ்வின் தூதரே! உணவையும் வழங்கக் கூடாதா?” என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கவர்கள், “அது தான் நம்முடைய செல்வங்களில் மிகச் சிறப்பானதாகும்” என்று பதிலளித்தார்கள்.

இரவல் வாங்கப்பட்ட பொருள் (திருப்பிச்) செலுத்தப்பட வேண்டியதாகும். குறிப்பிட்ட காலம் வரை பயன்பெற வாங்கிய பொருள் (திருப்பிச்) செலுத்தப்பட வேண்டியதாகும். கடன் நிறைவேற்றப்பட வேண்டியதாகும். (பிறரது) கடனுக்குப் பொறுப்பேற்றவனும் கடனாளியே!