🔗

திர்மிதி: 2168

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

أَيُّهَا النَّاسُ، إِنَّكُمْ تَقْرَءُونَ هَذِهِ الآيَةَ: {يَا أَيُّهَا الَّذِينَ آمَنُوا عَلَيْكُمْ أَنْفُسَكُمْ لَا يَضُرُّكُمْ مَنْ ضَلَّ إِذَا اهْتَدَيْتُمْ} [المائدة: 105]، وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ النَّاسَ إِذَا رَأَوْا الظَّالِمَ فَلَمْ يَأْخُذُوا عَلَى يَدَيْهِ أَوْشَكَ أَنْ يَعُمَّهُمُ اللَّهُ بِعِقَابٍ مِنْهُ»

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، عَنْ إِسْمَاعِيلَ بْنِ أَبِي خَالِدٍ، نَحْوَهُ.


பாடம்:

தீமைகளைத் தடுக்காவிட்டால் (அல்லாஹ்வின்) தண்டனை இறங்கிவிடும் என்பது குறித்து வந்துள்ளவை.

2168. அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறுவதாவது:

மக்களே நீங்கள் இந்த வசனத்தை ஓதுகிறீர்கள்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களைக் காத்துக் கொள்ளுங்கள்! நீங்கள் நேர் வழி நடக்கும் போது வழி கெட்டவனால் உங்களுக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீங்கள் அனைவரும் மீள்வது அல்லாஹ்விடமே. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி அவன் உங்களுக்கு (அப்போது) அறிவிப்பான். (அல்குர்ஆன்: 5:105)

(இதைப் படிக்கும் போது நாம் நல்லவர்களாக வாழ்ந்தாலே போதுமானது என்று நீங்கள் நினைக்கலாம்) ஆனால் நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறக் கேட்டிருக்கிறேன்.

மக்கள் அநியாயக்காரனைக் காணும் போது அவனது கைகளை அவர்கள் பிடிக்கா விட்டால் (அதாவது தீமையைத் தடுக்கா விட்டால்) அவர்கள் அனைவருக்கும் தனது தண்டனையை அல்லாஹ் பொதுவாக்கி விடும் நிலை விரைவில் ஏற்பட்டுவிடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: கைஸ் பின் அபூஹாஸிம் (ரஹ்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி ஆயிஷா (ரலி), உம்மு ஸலமா (ரலி), நுஃமான் பின் பஷீர் (ரலி), இப்னு உமர் (ரலி) , ஹுதைஃபா பின் யமான் (ரலி) ஆகியோர் வழியாகவும் வந்துள்ளது.

இந்தச் செய்தியை இஸ்மாயீல் பின் காலித் அவர்களிடமிருந்து அறிவிக்கும் பலரும் யஸீத் பின் ஹாரூன் அவர்களைப் போன்றே நபியின் சொல்லாக அறிவித்துள்ளனர்.

(இஸ்மாயீல் பின் காலித் அவர்களிடமிருந்து அறிவிக்கும்) வேறு சிலர் இந்தச் செய்தியை அபூபக்ர் (ரலி) அவர்களின் சொல்லாக அறிவித்துள்ளனர்.