தமிழ் ஹதீஸ் பிரவுஸர்

Tirmidhi-2192

A- A+


ஹதீஸின் தரம்: விபரம் கீழே

பாடம்:

ஷாம் (சிரியா) நாடு குறித்து வந்துள்ளவை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஷாம் (சிரியா) நாட்டில் வசிப்பவர்கள் அழிந்துவிட்டால் உங்களில் எந்த நன்மையும் இல்லை.

எனது சமுதாயத்தில் ஒரு கூட்டத்தினர் (அல்லாஹ்வினால்) உதவி செய்யப்பட்டுக் கொண்டே இருப்பார்கள். மறுமை நாள் வரும் வரை, அவர்களுக்கு இடைஞ்சல் செய்பவர்கள் அவர்களுக்குத் தீங்கிழைக்க முடியாது.

அறிவிப்பவர்: குர்ரா பின் இயாஸ் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

அலீ பின் மதீனீ அவர்கள், அந்தக் கூட்டத்தினர் ஹதீஸ்கலை அறிஞர்கள் ஆவார்கள் என்று கூறியதாக முஹம்மத் பின் இஸ்மாயீல்-புகாரீ இமாம் கூறினார்.

இப்பாடப் பொருள் தொடர்பான செய்தி அப்துல்லாஹ் பின் ஹவாலா (ரலி), இப்னு உமர் (ரலி), ஸைத் பின் ஸாபித் (ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

மேற்கண்ட செய்தி “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.

(திர்மிதி: 2192)

بَابُ مَا جَاءَ فِي الشَّامِ

حَدَّثَنَا مَحْمُودُ بْنُ غَيْلَانَ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ قَالَ: حَدَّثَنَا شُعْبَةُ، عَنْ مُعَاوِيَةَ بْنِ قُرَّةَ، عَنْ أَبِيهِ قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:

«إِذَا فَسَدَ أَهْلُ الشَّامِ فَلَا خَيْرَ فِيكُمْ، لَا تَزَالُ طَائِفَةٌ مِنْ أُمَّتِي مَنْصُورِينَ لَا يَضُرُّهُمْ مَنْ خَذَلَهُمْ حَتَّى تَقُومَ السَّاعَةُ»

قَالَ مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ: قَالَ عَلِيُّ بْنُ المَدِينِيِّ: هُمْ أَصْحَابُ الحَدِيثِ.
وَفِي البَابِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ حَوَالَةَ، وَابْنِ عُمَرَ، وَزَيْدِ بْنِ ثَابِتٍ، وَعَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَهَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ
حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ قَالَ: حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ قَالَ: أَخْبَرَنَا بَهْزُ بْنُ حَكِيمٍ، عَنْ أَبِيهِ، عَنْ جَدِّهِ، قَالَ: قُلْتُ: يَا رَسُولَ اللَّهِ أَيْنَ تَأْمُرُنِي؟ قَالَ: «هَاهُنَا»، وَنَحَا بِيَدِهِ نَحْوَ الشَّامِ.
هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ


Tirmidhi-Tamil-.
Tirmidhi-TamilMisc-.
Tirmidhi-Shamila-2192.
Tirmidhi-Alamiah-2118.
Tirmidhi-JawamiulKalim-2122.




இந்தச் செய்தியின் அறிவிப்பாளர்கள்:

1 . திர்மிதீ இமாம்

2 . மஹ்மூத் பின் ஃகைலான்

3 . தயாலிஸீ

4 . ஷுஅபா

5 . முஆவியா பின் குர்ரா

6 . குர்ரா பின் இயாஸ் (ரலி)


 


12 . இந்தக் கருத்தில் குர்ரா பின் இயாஸ் (ரலி) வழியாக வரும் செய்திகள்:

பார்க்க: முஸ்னத் தயாலிஸீ-, முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா-, அஹ்மத்-, இப்னு மாஜா-, திர்மிதீ-2192, முஸ்னத் பஸ்ஸார்-, இப்னு ஹிப்பான்-, அல்முஃஜமுல் கபீர்-,


மேலும் பார்க்க: புகாரி-71.

கேள்விகள், விமர்சனங்களை முடிந்தவரை தமிழில் மட்டுமே பதிவிடவும். (thanglish) தங்கிலீஷ்-ல் பதிவிட வேண்டாம்.