«الخِلَافَةُ فِي أُمَّتِي ثَلَاثُونَ سَنَةً، ثُمَّ مُلْكٌ بَعْدَ ذَلِكَ»
ثُمَّ قَالَ لِي سَفِينَةُ: أَمْسِكْ خِلَافَةَ أَبِي بَكْرٍ، وَخِلَافَةَ عُمَرَ، وَخِلَافَةَ عُثْمَانَ، ثُمَّ قَالَ لِي: أَمْسِكْ خِلَافَةَ عَلِيٍّ قَالَ: فَوَجَدْنَاهَا ثَلَاثِينَ سَنَةً، قَالَ سَعِيدٌ: فَقُلْتُ لَهُ: إِنَّ بَنِي أُمَيَّةَ يَزْعُمُونَ أَنَّ الخِلَافَةَ فِيهِمْ؟ قَالَ: كَذَبُوا بَنُو الزَّرْقَاءِ بَلْ هُمْ مُلُوكٌ مِنْ شَرِّ المُلُوكِ،
2226. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது சமுதாயத்தில் (எனது வழியில் நடைபெறும்) கிலாஃபத் எனும் ஆட்சி முப்பது வருடங்கள் இருக்கும். அதற்குப் பிறகு மன்னராட்சி நடைபெறும்.
அறிவிப்பவர்: அபூஅப்துரஹ்மான்-ஸஃபீனா (ரலி)
ஸஃபீனா (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஸயீத் பின் ஜும்ஹான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
பிறகு ஸஃபீனா (ரலி) அவர்கள், அபூபக்ர் (ரலி), உமர் பின் கத்தாப் (ரலி), உஸ்மான் பின் அஃப்பான் (ரலி), அலீ பின் அபூதாலிப் (ரலி) ஆகியோரின் கிலாஃபத் (வருடத்)தை கணக்கிட்டுக் கொள்! என்று என்னிடம் கூறினார்கள். கணக்கிட்டுப் பார்க்கும்போது அது முப்பது வருடங்கள் வந்தன.
அப்போது நான், இந்த பனூ உமைய்யாக்கள் தங்களை கிலாஃபத் ஆட்சியாளர்கள் என்று சொல்லிக் கொள்கிறார்களே! என்று கூறினேன். அதற்கவர்கள், “ஸர்கா எனும் பெண்ணின் வமிசத்தில் வந்துள்ள இந்த பனூ உமைய்யாக்கள் பொய் சொல்கின்றனர். இவர்கள் தீய மன்னர்கள் ஆவார்கள்” என்று கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
“நபி (ஸல்) அவர்கள் (தனக்குப் பிறகு) யார் கிலாஃபத் ஆட்சிக்கு வரவேண்டும் என்பது குறித்து எதுவும் மரண சாசனம் செய்யவில்லை” என்று உமர் (ரலி), அலீ (ரலி) ஆகியோர் கூறினார்கள் என்று இப்பாடப்பொருள் தொடர்பாக ஒரு செய்தி வந்துள்ளது.
ஸஃபீனா (ரலி) வழியாக வரும் மேற்கண்ட செய்தி ஹஸன் தரத்தில் அமைந்ததாகும். இந்தச் செய்தியை ஸயீத் பின் ஜும்ஹான் (ரஹ்) அவர்களிடமிருந்து பலரும் அறிவித்துள்ளனர். இவர் மட்டுமே இந்தச் செய்தியை அறிவித்துள்ளதாக நாம் அறிகிறோம். (வேறு யாரும் இந்தச் செய்தியை அறிவிக்கவில்லை)