🔗

திர்மிதி: 2291

ஹதீஸின் தரம்: ஸஹீஹ் - பலமான செய்தி

«فِي آخِرِ الزَّمَانِ لَا تَكَادُ رُؤْيَا المُؤْمِنِ تَكْذِبُ وَأَصْدَقُهُمْ رُؤْيَا أَصْدَقُهُمْ حَدِيثًا، وَالرُّؤْيَا ثَلَاثٌ، الحَسَنَةُ بُشْرَى مِنَ اللَّهِ، وَالرُّؤْيَا يُحَدِّثُ الرَّجُلُ بِهَا نَفْسَهُ، وَالرُّؤْيَا تَحْزِينٌ مِنَ الشَّيْطَانِ، فَإِذَا رَأَى أَحَدُكُمْ رُؤْيَا يَكْرَهُهَا فَلَا يُحَدِّثْ بِهَا أَحَدًا وَلْيَقُمْ فَلْيُصَلِّ»

قَالَ أَبُو هُرَيْرَةَ: «يُعْجِبُنِي القَيْدُ وَأَكْرَهُ الغُلَّ». القَيْدُ: ثَبَاتٌ فِي الدِّينِ

قَالَ: وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «رُؤْيَا المُؤْمِنِ جُزْءٌ مِنْ سِتَّةٍ وَأَرْبَعِينَ جُزْءًا مِنَ النُّبُوَّةِ»


2291. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உலக இறுதி நாளின் (நெருக்கத்தில்) ஒரு இறைநம்பிக்கையாளர் காணும் கனவு பொய்யாகப் போவதில்லை. உங்களில் (நல்ல) உண்மையான கனவு காண்பவரே உண்மை பேசுகின்றவர் ஆவார்.

கனவுகள் மூன்று வகையாகும். நல்ல கனவு அல்லாஹ்விடமிருந்து வரும் நற்செய்தியாகும். இன்னொரு வகை ஒரு மனிதரின் உள்ளத்தில் தோன்றுகின்ற பிரமையாகும். கவலையளிக்கக்கூடிய கனவு ஷைத்தானிடமிருந்து வருவதாகும். ஆகவே, உங்களில் ஒருவர் தாம் விரும்பாத கனவொன்றைக் கண்டால், உடனே அவர் எழுந்து (இறைவனைத்) தொழட்டும். அதைப் பற்றி மக்களிடம் தெரிவிக்க வேண்டாம்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

மேலும் அபூஹுரைரா (ரலி) கூறினார்:

நான் காலில் விலங்கிடப்படுவதைப் போன்று கனவு காண்பதை விரும்புகிறேன். கழுத்தில் விலங்கிடப்படுவதைப் போன்று காண்பதை வெறுக்கிறேன். கால் விலங்கு, மார்க்கத்தில் நிலைத்திருப்பதைக் குறிக்கும்.

மேலும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், “இறைநம்பிக்கையாளர் காணும் (நல்ல) கனவு நபித்துவத்தின் நாற்பத்தாறு பாகங்களில் ஒன்றாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என அறிவித்தார்.

அபூதாவூத் இமாம் கூறுகிறார்:

இந்த செய்தியை (மஃமர் அவர்களைப் போன்று) அப்துல் வஹ்ஹாப் அஸ்ஸகஃபீ (ரஹ்) அவர்களும், அய்யூப் அவர்களிடமிருந்து நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார்.

ஆனால் ஹம்மாத் பின் ஸைத், அய்யூப் அவர்களிடமிருந்து நபித்தோழரின் கூற்றாக அறிவித்துள்ளார்.