«أَكْثِرُوا ذِكْرَ هَاذِمِ اللَّذَّاتِ» يَعْنِي الْمَوْتَ
பாடம்:
மரணத்தை நினைவு கூறுவது தொடர்பாக வந்துள்ளவை.
2307. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
(தவறான) ஆசைகளைத் தகர்க்கக் கூடிய மரணத்தை அதிகமாக நினைவு கூறுங்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இப்பாடப்பொருள் தொடர்பான செய்தி அபூஸயீத் (ரலி) அவர்கள் வழியாகவும் வந்துள்ளது.
மேற்கண்ட செய்தி “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்ததாகும்.