«لَوْ أَنَّكُمْ كُنْتُمْ تَوَكَّلُونَ عَلَى اللَّهِ حَقَّ تَوَكُّلِهِ لَرُزِقْتُمْ كَمَا يُرْزَقُ الطَّيْرُ تَغْدُو خِمَاصًا وَتَرُوحُ بِطَانًا»
பாடம்:
அல்லாஹ்வையே சார்ந்திருப்பது (முழுநம்பிக்கை கொண்டிருப்பது)
2344. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
நீங்கள் அல்லாஹ்வின் மீது (நம்முடைய உணவுக்குப் பொறுப்பு இறைவன் தான் என்று) நம்பிக்கை வைக்க வேண்டிய விதத்தில் (பரிபூரணமாக) நம்பிக்கை வைத்தால் பறவைகளுக்கு இறைவன் உணவளிப்பது போன்று நீங்கள் உணவளிக்கப்படுவீர்கள்! பறவைகள் காலையில் வயிறு காலியாக (கூட்டை விட்டு) இரையைத் தேடி வெளியே செல்கின்றன. மாலையில் வயிறு நிரம்ப (கூட்டை) வந்தடைகின்றன.
அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது “ஹஸன் ஸஹீஹ்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இந்த வகை அறிவிப்பாளர்தொடரில் தான் இந்தச் செய்தியை நாம் அறிகிறோம்.
அபூதமீம் அல்ஜைஷானீ அவர்களின் இயற்பெயர் அப்துல்லாஹ் பின் மாலிக் என்பதாகும்.