قَالَ رَجُلٌ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: يَا رَسُولَ اللَّهِ وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ. فَقَالَ لَهُ: «انْظُرْ مَاذَا تَقُولُ»، قَالَ: وَاللَّهِ إِنِّي لَأُحِبُّكَ، ثَلَاثَ مَرَّاتٍ، فَقَالَ: «إِنْ كُنْتَ تُحِبُّنِي فَأَعِدَّ لِلْفَقْرِ تِجْفَافًا، فَإِنَّ الفَقْرَ أَسْرَعُ إِلَى مَنْ يُحِبُّنِي مِنَ السَّيْلِ إِلَى مُنْتَهَاهُ»
حَدَّثَنَا نَصْرُ بْنُ عَلِيٍّ قَالَ: حَدَّثَنَا أَبِي، عَنْ شَدَّادٍ أَبِي طَلْحَةَ، نَحْوَهُ بِمَعْنَاهُ،
பாடம்:
ஏழ்மையின் சிறப்பு பற்றி வந்துள்ளவை.
2350. அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து), “அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை யோசித்து சொல்லுங்கள்” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் என்ன சொல்கிறீர்கள் என்பதை யோசித்து சொல்லுங்கள்!” என்று கூறினார்கள். அந்த மனிதர், “அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை நான் நேசிக்கிறேன்” என்று கூறினார். இவ்வாறு மூன்று முறை நடந்தது.
பிறகு நபி (ஸல்) அவர்கள், “நீங்கள் (உண்மையிலேயே) என்னை நேசிப்பீர்களானால் வறுமையை எதிர்கொள்ள தக்க முன்னேற்பாட்டுடன் தயாராகிக் கொள்ளுங்கள்!. ஏனெனில், பள்ளத்தை நோக்கிச் செல்லும் வெள்ளத்தைக் காட்டிலும் என்னை நேசிப்பவரை நோக்கி வறுமை விரைவாக வந்துசேரும்” என்று கூறினார்கள்.
இந்த செய்தி இரண்டு அறிவிப்பாளர்தொடர்களில் வந்துள்ளது.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது ஹஸன் ஃகரீப் என்ற தரத்தில் அமைந்த ஹதீஸாகும்.
இந்த செய்தியில் இடம்பெறும் அபுல்வாஸிஉ அர்ராஸிபீ என்பவரின் இயற்பெயர் ஜாபிர் பின் அம்ர் என்பதாகும். இவர் (இராக்கிலுள்ள) பஸரா நகரத்தைச் சேர்ந்தவர் ஆவார்.