كُنَّا عِنْدَ أَبِي هُرَيْرَةَ، وَعَلَيْهِ ثَوْبَانِ مُمَشَّقَانِ مِنْ كَتَّانٍ فَتَمَخَّطَ فِي أَحَدِهِمَا ثُمَّ قَالَ: «بَخٍ بَخٍ يَتَمَخَّطُ أَبُو هُرَيْرَةَ فِي الكَتَّانِ، لَقَدْ رَأَيْتُنِي وَإِنِّي لَأَخِرُّ فِيمَا بَيْنَ مِنْبَرِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَحُجْرَةِ عَائِشَةَ مِنَ الجُوعِ مَغْشِيًّا عَلَيَّ، فَيَجِيءُ الجَائِي فَيَضَعُ رِجْلَهُ عَلَى عُنُقِي يَرَى أَنَّ بِيَ الجُنُونَ، وَمَا بِي جُنُونٌ وَمَا هُوَ إِلَّا الجُوعُ»
2367. முஹம்மத் பின் ஸீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் களிமண் சாயம் இடப்பட்ட இரண்டு சணல் ஆடைகளை அணிந்திருந்தார்கள். அப்போது அவர்கள் அதில் ஒரு ஆடையினால் மூக்குச் சிந்திவிட்டு “அடடா! அபூஹுரைரா! சணல் துணியிலேயே மூக்குச் சிந்துகிறாயே! (ஒரு காலத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடை(மிம்பரு)க்கும் ஆயிஷா (ரலி) அவர்களது அறைக்குமிடையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்துக் கிடப்பேன்.
அங்கு வருபவர் எவரேனும் வந்து நான் பைத்தியக்காரன் என்று நினைத்து என் கழுத்தின் மீது கால் வைப்பார். ஆனால், எனக்குப் பசிதான் (மேலிட்டு) இருக்கும்; பைத்தியம் எதுவும் இருக்காது (அந்த அளவுக்கு வறுமையில் இருந்தேன்.)” என்று சொன்னார்கள்.