🔗

திர்மிதி: 2407

ஹதீஸின் தரம்: விபரம் கீழே

إِذَا أَصْبَحَ ابْنُ آدَمَ فَإِنَّ الأَعْضَاءَ كُلَّهَا تُكَفِّرُ اللِّسَانَ فَتَقُولُ: اتَّقِ اللَّهَ فِينَا فَإِنَّمَا نَحْنُ بِكَ، فَإِنْ اسْتَقَمْتَ اسْتَقَمْنَا وَإِنْ اعْوَجَجْتَ اعْوَجَجْنَا


2407. “மனிதனின் உறுப்புகள் அனைத்தும், மனிதன் காலையில் கண்விழிக்கும் போது, நாவிடம் (நாவு தவறு செய்வதைத் தடுத்து) நன்மையில் உறுதியாக இருக்கும்படி வேண்டுகின்றன.

‘நீ எங்களுக்காக அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள். நீ நேர்வழியில் இருந்தால், நாங்களும் நேர்வழியில் இருப்போம். நீ கோணலானால், நாங்களும் கோணலாவோம்’ எனக் கூறுகின்றன” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தச் செய்தி ஹன்னாத் —> அபூஉஸாமா —> ஹம்மாத் பின் ஸைத் என்ற அறிவிப்பாளர்தொடரில் நமக்கு கிடைத்துள்ளது. ஆனால் இதில் நபியின் சொல்லாக வரவில்லை. இது முஹம்மத் பின் மூஸா அவர்களின் செய்தியை விட மிகச் சரியானதாகும்.

இந்த ஹதீஸை நாம் ஹம்மாத் பின் ஸைத் வழியாகவே அறிகிறோம். மேலும், ஹம்மாத் பின் ஸைத் அவர்களிடமிருந்து இந்த ஹதீஸை பலர் அறிவித்துள்ளனர். அவர்கள் இதை நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.


மேலம் இந்தச் செய்தி ஸாலிஹ் பின் அப்துல்லாஹ் —> ஹம்மாத் பின் ஸைத் —> அபுஸ்ஸஹ்பாஃ —> ஸயீத் பின் ஜுபைர் —> அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) என்ற அறிவிப்பாளர்தொடரிலும் நமக்கு கிடைத்துள்ளது.

இதன் அறிவிப்பாளரான ஹம்மாத் பின் ஸைத் அவர்கள் இது நபி (ஸல்) அவர்களின் சொல் என்றே நான் எண்ணுகிறேன் எனக் கூறி மேற்கண்டவாறு அறிவித்தார்.