«كَيْفَ أَنْعَمُ وَصَاحِبُ القَرْنِ قَدِ التَقَمَ القَرْنَ وَاسْتَمَعَ الإِذْنَ مَتَى يُؤْمَرُ بِالنَّفْخِ فَيَنْفُخُ» فَكَأَنَّ ذَلِكَ ثَقُلَ عَلَى أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَ لَهُمْ: ” قُولُوا: حَسْبُنَا اللَّهُ وَنِعْمَ الوَكِيلُ عَلَى اللَّهِ تَوَكَّلْنَا “
2431. அபூஸயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “என்னால் எப்படி இன்புற்றிருக்க முடியும்?. எக்காளம் ஊதுகின்ற (வான)வர் எக்காளத்தின் முனைப் பகுதியை தமது வாயில் வைத்துக்கொண்டு, ஊதுமாறு எப்போது உத்தரவிடப்படும் என்று காது தாழ்த்தி காத்திருக்கிறாரே! என்று கூறினார்கள்.
இது நபித்தோழர்களுக்கு பாரமாக இருந்தது (போலும்).
அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் “ஹஸ்புனல்லாஹு, வ நிஃமல் வகீல்; அலல்லாஹி தவக்கல்னா. (பொருள்: அல்லாஹ் எங்களுக்கு போதுமானவன்; அவனே சிறந்த பாதுகாவலன்; அல்லாஹ்வையே நாங்கள் சார்ந்துள்ளோம்) எனக் கூறுங்கள் என்றார்கள்.