«مَنْ كَانَتِ الآخِرَةُ هَمَّهُ جَعَلَ اللَّهُ غِنَاهُ فِي قَلْبِهِ وَجَمَعَ لَهُ شَمْلَهُ، وَأَتَتْهُ الدُّنْيَا وَهِيَ رَاغِمَةٌ، وَمَنْ كَانَتِ الدُّنْيَا هَمَّهُ جَعَلَ اللَّهُ فَقْرَهُ بَيْنَ عَيْنَيْهِ، وَفَرَّقَ عَلَيْهِ شَمْلَهُ، وَلَمْ يَأْتِهِ مِنَ الدُّنْيَا إِلَّا مَا قُدِّرَ لَهُ»
2465. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
யாருடைய எண்ணம் மறுமையை நோக்கி இருக்கிறதோ அவருடைய உள்ளத்தில் அல்லாஹ் போதுமென்ற நிலையை உருவாக்கிவிடுவான். அவருடைய காரியங்களை ஒன்றுகூடச் செய்வான். உலகம் சரணடைந்து அவருக்கு ஓடிவரும். யாருடைய எண்ணம், உலகத்தை நாடி இருக்கிறதோ அவருடைய கண்ணுக்கு முன் ஏழ்மையை கொண்டு வருவான். அவருடைய காரியங்களை சிதறடித்து விடுவான் உலகத்தில் அவருக்கு ஏற்படுத்தப்பட்ட அளவு (மட்டும்) வரும்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)