أَنَّهُمْ ذَبَحُوا شَاةً، فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: «مَا بَقِيَ مِنْهَا»؟ قَالَتْ: مَا بَقِيَ مِنْهَا إِلَّا كَتِفُهَا قَالَ: «بَقِيَ كُلُّهَا غَيْرَ كَتِفِهَا»
பாடம்:
2470. ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:
நாங்கள் ஒரு ஆட்டை அறுத்தோம். (பிறகு அதில் அதிகமானதை பிறருக்கு வழங்கிவிட்டோம்.) நபி (ஸல்) அவர்கள், “அதில் மீதம் எவ்வளவு எஞ்சியுள்ளது?” என்று கேட்டார்கள். நான் ஆட்டின் தொடைப் பகுதி இறைச்சிதான் மீதம் உள்ளது என்று கூறினேன். அதற்கவர்கள், “ஆட்டின் தொடைப் பகுதியைத் தவிர பிறருக்கு தர்மமாக வழங்கியது தான் நமக்கு மீதமாக எஞ்சியுள்ளது” என்று கூறினார்கள்.
திர்மிதீ இமாம் கூறுகிறார்:
இது சரியான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்தொடரில் இடம்பெறும் அபூமைஸரா என்பவர் அபூமைஸரா அல்ஹம்தானீ என்பவர் ஆவார். இவரின் இயற்பெயர் அம்ர் பின் ஷுரஹ்பீல் என்பதாகும்.