🔗

திர்மிதி: 2499

ஹதீஸின் தரம்: இஸ்னாதுஹூ ளயீஃப் - முழு விபரம் கீழே உள்ளது

«كُلُّ ابْنِ آدَمَ خَطَّاءٌ وَخَيْرُ الخَطَّائِينَ التَّوَّابُونَ»


2499. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே!

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)


திர்மிதீ இமாம் கூறுகிறார்:

(இந்த ஹதீஸ்) “ஃகரீப்” (அறிமுகம் குறைந்த, அரிதான செய்தி எனும்) வகையைச் சேர்ந்தது. இதை கதாதா அவர்களிடமிருந்து அலீ பின் மஸ்அதா என்பவர் மட்டுமே (தனித்து) அறிவிப்பதாக நாம் அறிகிறோம்.