🔗

திர்மிதி: 257

ஹதீஸின் தரம்: ளயீஃப் - பலவீனமான செய்தி

«أَلَا أُصَلِّي بِكُمْ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ؟ فَصَلَّى، فَلَمْ يَرْفَعْ يَدَيْهِ إِلَّا فِي أَوَّلِ مَرَّةٍ»


257. இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள், “தெரிந்துக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுதது போன்று உங்களுக்கு தொழுது காட்டப்போகிறேன்” என்று கூறிவிட்டு தொழுதார்கள். அப்போது அவர்கள், (தொழுகையின்) ஆரம்பத்தில் ஒரு தடவையே இருகைகளையும் உயர்த்தினார்கள்.

அறிவிப்பவர்: அல்கமா பின் கைஸ் (ரஹ்)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இந்தக் கருத்தில் பராஉ பின் ஆஸிப் (ரலி) வழியாகவும் செய்திகள் வந்துள்ளன. இப்னு மஸ்வூத் (ரலி) அவர்களின் இந்த செய்தி ஹஸன் தரத்தில் அமைந்த செய்தியாகும்.

(மேற்கண்ட செய்தியில் உள்ள-இருகைகளையும் தக்பீர் தஹ்ரீமாவின் ஆரம்பத்தில் மட்டுமே உயர்த்த வேண்டும்; ருகூவிற்கு செல்லும் முன்பும், ருகூவிலிருந்து எழுந்த பின்பும், இரண்டாவது ரக்அத்தின் இருப்பிலிருந்து எழும்போதும் இருகைகளை உயர்த்தக் கூடாது என்ற) இந்த சட்டத்தையே சில நபித்தோழர்கள், (அவர்களை அடுத்து வந்த) தாபிஈன்கள் போன்ற பல கல்வியாளர்கள் கூறுகின்றனர்.  ஸுஃப்யான் ஸவ்ரீ அவர்களின் கருத்தும், கூஃபாவாசிகளின் கருத்தும் இதுவே!