🔗

திர்மிதி: 2647

ஹதீஸின் தரம்: ஆய்வில் உள்ளது

«مَنْ خَرَجَ فِي طَلَبِ العِلْمِ فَهُوَ فِي سَبِيلِ اللَّهِ حَتَّى يَرْجِعَ»


2647. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மார்க்க) கல்வியைத் தேடிச் செல்பவர், திரும்பி வரும் வரை அல்லாஹ்வின் பாதையில் இருக்கிறார்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

திர்மிதீ இமாம் கூறுகிறார்:

இது “ஹஸன் ஃகரீப்” எனும் தரத்தில் அமைந்த செய்தியாகும். இதைச் சிலர் நபியின் சொல்லாக அறிவிக்கவில்லை.